ஆர்.காவனூர் அரசுப் பள்ளியில் விதைப் பந்துகள் தயாரிப்பு

ராமநாதபுரம் அருகேயுள்ள ஆர்.காவனூர்  அரசுப் பள்ளியில் மாணவர்கள் வெள்ளிக்கிழமை விதைப்பந்துகள் தயாரித்து விதைத்தனர்.

ராமநாதபுரம் அருகேயுள்ள ஆர்.காவனூர்  அரசுப் பள்ளியில் மாணவர்கள் வெள்ளிக்கிழமை விதைப்பந்துகள் தயாரித்து விதைத்தனர்.
      ராமநாதபுரம் விதைகள் அமைப்பும், நேஷனல் அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும் இணைந்து ஒரு கோடி விதைப் பந்துகளை தயாரித்து அரசுப்பள்ளிகளுக்கு வழங்க முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி ஆர்.காவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும்  நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ராமநாதபுரம் நேஷனல் அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் விதைப்பந்துகள் தயாரிக்கும் முறையை செய்து காண்பித்தனர்.
  பள்ளி வளாகத்திலேயே வேம்பு, நெல்லி, மா உள்ளிட்ட பல்வேறு மரங்களின் விதைகள் சேகரிக்கப்பட்டு விதைப்பந்துகள் தயாரிக்கப்பட்டன. பின்னர் பள்ளி மைதானங்களிலும், வெட்ட வெளியிலும் விதைப் பந்துகளை விதைத்தனர். இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நேஷனல் அகாதெமி மெட்ரிக் பள்ளி தாளாளர் செய்யதா அப்துல்லா, முதல்வர் ராஜம்முத்து, பள்ளி ஆலோசகர் சங்கரலிங்கம்,  விதைகள் அமைப்பின் நிர்வாகிகள் அரு.சுப்பிரமணியன், செந்தில்குமார், ஆர்.காவனூர் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்மாறன்,துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சாரதா ஆகியோர் உள்பட ஆசிரியர்கள்,மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com