கல்லூர் குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேக்கம் கொசு உற்பத்தியை தடுக்க கோரிக்கை

திருவாடானைத் தாலுகா கல்லூர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கியிருப்பதால் டெங்கு காய்ச்சல் அச்சத்தில் அப்பகுதி பொது மக்கள் உள்ளனர்.

திருவாடானைத் தாலுகா கல்லூர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கியிருப்பதால் டெங்கு காய்ச்சல் அச்சத்தில் அப்பகுதி பொது மக்கள் உள்ளனர்.
  கல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட கல்லூர் கிராமத்தில் ரேஷன் கடை அருகே உள்ள குளத்திற்கு மழை நீர் செல்லும் தூம்பு பகுதியை தூர்த்து பஞ்சாயத்து நிர்வாகம் கட்டடம் கட்டிவிட்டது. இதனால் மழை காலங்களில் மழை நீர் வெளியே செல்லாமல் குடியிருப்பு பகுதியிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள்
கடிப்பதாகவும், அதனால் டெங்கு காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சத்தில் வாழ்வதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இனி வரும் காலங்களில் இப்பகுதியில் மழை நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தற்போது தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தி ஆகி விடாமல் தடுக்க சுகாதாரத்துறையினர்  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com