ஓய்வூதியர் சங்க கூட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டப் பேரவைக் கூட்டம் அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டப் பேரவைக் கூட்டம் அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தலைவர் பி.கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பி.புஷ்பராஜ், பொருளாளர் கே.ராஜரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பி.சேகர் கூட்டத்தை தொடக்கி வைத்து பேசினார்.சங்க இணைச் செயலாளர் ஜி.மகேந்திரநாத் வரவேற்றார்.
     காவல்துறையினரின் ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் பி.தியாகராஜன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் ஆர்.குருவேல்,மாநிலப் பொருளாளர் என்.ஜெயச்சந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
சென்னையிலிருந்து ராமேசுவரத்துக்கு பகல்நேர  ரயில்கள் இயக்கப்பட வேண்டும், பரமக்குடி- ராமேசுவரம் இடையே நான்கு வழிச் சாலை பணிகளை விரைந்து அமைக்க வேண்டும், பாழடைந்த நிலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை இடிக்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைத் தலைவர் முகம்மது சீது நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com