நெசவுத் தொழிலைப் பாதுகாக்க ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிக்க ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கம் கோரிக்கை

கைத்தறி நெசவுத் தொழிலை பாதுகாக்க ஜி.எஸ்.டி. வரிவிலக்கு அமல்படுத்த வேண்டும் என ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கைத்தறி நெசவுத் தொழிலை பாதுகாக்க ஜி.எஸ்.டி. வரிவிலக்கு அமல்படுத்த வேண்டும் என ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 எமனேசுவரம் ஏ.ஐ.டி.யூ.சி. கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்ம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் கே.கே. கோவிந்தன் தலைமை வகித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலர் என்.எஸ். பெருமாள், மாநில கைத்தறி சம்மேளன செயலாளர் எஸ்.பி.ராதா,  நிர்வாகிகள் கே.ஆர்.சுப்பிரமணியன், எம்.பி.ருக்மாங்கதன், ஜி.ஆர்.ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 ஆர்ப்பாட்டத்தில், பாரம்பரிய கைத்தறி நெசவுத் தொழிலை பாதுகாத்திட ஜி.எஸ்.டி.யிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கக் கோரியும்,  நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யும் சேலை ரகங்களுக்கு ஜி.எஸ்.டி.யால்   பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. சிறு குறு தொழில்களில் ஒன்றான நெசவுத் தொழிலில் இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஜி.எஸ்.டி. வரியால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நெசவுத் தொழிலை  பாதுகாக்க ஜி.எஸ்.டி. வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com