பயிர் மேலாண்மை பயிற்சி முகாம்கள்

திருவாடானை வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.

திருவாடானை வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.
தொழில் நுட்ப மேலாண்மை முகமை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகாமில் திருவாடானை வேளாண்மை உதவி இயக்குநர் கெர்சோன் தங்கராஜ் தலைமை வகித்தார். இதில் 40 முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண்மை உதவி இயக்குநர் மணவாளன் கலந்து கொண்டு , நெல் இரகத் தேர்வு,விதை நேர்த்தி, களை மேலாண்மை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். வேளாண்மை அலுவலர் பாக்யராஜ் கலந்து கொண்டு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம்,நெற்பயிரில் பூச்சி தாக்குதல் மற்றும் நோய் நிர்வாகம் ஆகியவற்றி பற்றி எடுத்துரைத்தார். பின்னர் திரவ உயிரி உரம் இடுதலின் பற்றி செயல் விளக்கம் செய்து காண்பிக்கபட்டது. தொழில் நுட்ப மேலாளர் சூர்யா நன்றி தெரிவித்தார்.
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே கீழக்குளம் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிர் மேலாண்மை பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
பயிறுவகைப் பயிர்களை பாதுகாப்பது குறித்து நடைபெற்ற முகாமுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.மனோகரன் தலைமை வகித்தார். முகாமில் வேளாண்மை உதவி இயக்குநர் எம்.மணவாளன், வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஹேமலதா ஆகியோர் விசாயிகள் பயிர்வகை களை ஒருங்கிணைத்து பயிர் மேலாண்மை விவசாயம் செய்வது பற்றிய பயிற்சிகளை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.
முகாமில் பணி நிறைவு பெற்ற வேளாண்மை உதவி இயக்குநர் எம்.எஸ்.சுந்தரேசன் பயிர்வகைகளையும் விதை ரகங்களையும் தேர்வு செய்வது, விதை நேர்த்தி முறைகள், உரம் இடும் விதம் ஆகியவற்றை எடுத்துரைத்தார். உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் ஐயப்பன், சந்திரகுரு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com