ராமேசுவரத்தில் 22 விசைப்படகுகள் மீன் பிடிக்கத் தடை-அபராதம் விதிப்பு: மீன்வளத்துறை நடவடிக்கை

ராமேசுவரத்தில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்த 22 விசைப்படகுகளுக்கு மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.

ராமேசுவரத்தில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்த 22 விசைப்படகுகளுக்கு மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் அட்டை, கடல் குதிரை, கடல் ஆமை உள்ளிட்ட 3600 அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் அதிக அளவில் மீன்களைப் பிடிக்கும் ஆசையில் சிலர் சுருக்குமடி, இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்துவதால் இந்த வகை உயிரினங்களும் அழிக்கப்படும் சூழ்நிலை உருவாகிறது. இதை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் அரிய வகை உயிரினங்களை பிடிக்க தடை விதித்துள்ளது. இரட்டை மடி மற்றும் சுருக்கு மடி போன்ற வலைகளைப் பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது.
இந்த தடையை மீறி ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடித்து வருவதாக மீன்வளத் துறை அதிகாரிகளுக்கும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து சம்பந்தப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி விளக்கமும் கேட்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் 22 பேர் தொடர்ந்து 3 மாதங்களுக்கு கடலில் மீன்பிடிக்க தடை விதித்து ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநர் ஐசக்.ஜெயக்குமார் உத்தரவிட்டார். மேலும் அவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதே போல 22 விசைப் படகுகளுக்கும் அரசால் வழங்கப்படும் மானிய டீசலை 3 மாதங்களுக்கு வழங்க வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் முதலாக தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தியதாக விசைப்படகு உரிமையாளர்கள் 22 பேர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com