கமுதி பகுதியில் மிளகாய்க்கு மாற்று விவசாயம் அறுவடைக்குத் தயார் நிலையில் சூரிய காந்தி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் மிளகாய் பயிருக்கு மாற்றாக சாகுபடி  செய்திருந்த சூரியகாந்தி விளைந்து மகசூல் நிலையை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்சியில் உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் மிளகாய் பயிருக்கு மாற்றாக சாகுபடி  செய்திருந்த சூரியகாந்தி விளைந்து மகசூல் நிலையை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்சியில் உள்ளனர்.
  கமுதி பகுதியில் பெருநாழி, வாலசுப்பிரமணியபுரம், திம்மநாதபுரம், பாப்புரெட்டிபட்டி, லெட்சுமிபுரம், ராணிசேதுபுரம், குமராபுரம், வெள்ளாங்குளம், காடாமங்கலம், துத்திநத்தம், பொந்தம்புளி, வீரமச்சன்பட்டி, உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள்  சூரியகாந்தி சாகுபடி செய்துள்ளனர்.
   இந்த ஆண்டு பெய்ய வேண்டிய பருவமழை, போதிய அளவு முறையாக காலத்திற்குள் பெய்யாததால் மிளகாய் சாகுபடிக்கு  பதிலாக, சூரியகாந்தி சாகுபடி செய்திருந்தனர்.
   தற்போது இந்த  சூரியகாந்தி பயிர்கள் நன்கு வளர்ந்து மகசூல் நிலையை எட்டியுள்ளது. 
  இது குறித்து டி.வி.எஸ்.புரம் விவசாயி சிவசித்தையா கூறியதாவது: 
    இந்த ஆண்டு கமுதி பகுதியில் பருவமழை முறையாகப் பெய்யாததால் மிளகாய் சாகுபடிக்கு பதிலாக சூரியகாந்தி பயிரிட்டுள்ளோம். இதில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் அரசு கூடுதல் விலை நிர்ணயம் செய்து உதவ வேண்டும். மேலும் நெல் விவசாயிகளுக்கு வறட்சி காலத்தில் மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்குவதைப்போல் சிறுதானிய குறுகிய காலப் பயிர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com