பாபர் மசூதி இடிப்பு தினம்: ராமநாதபுரம், பரமக்குடியில் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்தும், அதனை மீட்க வலியுறுத்தியும் ராமநாதபுரத்தில் அரசுப் போக்குவரத்துக்கழகப் பணிமனை முன்

பாபர் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்தும், அதனை மீட்க வலியுறுத்தியும் ராமநாதபுரத்தில் அரசுப் போக்குவரத்துக்கழகப் பணிமனை முன் புதன்கிழமை தமுமுக-வினர் கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தமுமுக கிழக்கு மாவட்டத் தலைவர் பி.அன்வர்அலி தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் அப்பாஸ் அபுதாஹிர், மனிதநேய மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் ஜஹாங்கீர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மாநில செயலாளர் எஸ்.மைதீன் சேட்கான், மனிதநேய மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட முன்னாள் பொருளாளர் எஸ்.ஜாகீர்ஹீசேன், தமிழ்ப்புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மு.தமிழ்முருகன், மனிதநேய மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் முகம்மது இக்பால் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தமுமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் ஏ.டி.எஸ்.பி. எஸ்.வெள்ளத்துரை தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.
பரமக்குடி: பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், அதே இடத்தில் மீண்டும் கட்டித்தரக்கோரியும் பரமக்குடியில் எஸ்.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
      பரமக்குடி பாரதி நகர் பகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் நூர்ஜியாவுதீன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்டத் தலைவர் முஹம்மது இஸ்ஹாக்,  பொதுச்செயலாளர் அஸ்கர்அலி, பொருளாளர் அரபிமுஜீபுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
 ஜமாத்துல் உலமா மாவட்ட செயலாளர் மெளலானா முஹம்மது ஜலாலுதீன் அன்வாரி, கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் அப்பாஸ் அலி மன்பயீ ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் அப்துல்வஹ்ஹாப் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுல்த்தான்அலாவுதீன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com