கண்ணார்பட்டியில் சேதமடைந்த அரசு கட்டடங்களை அகற்ற உத்தரவு

தினமணி செய்தி எதிரொலியாக கமுதி கண்ணார்பட்டியில் உள்ள சேதமடைந்த பயன்பாடில்லாத பொதுப்பணித்துறை அலுவலகங்களை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தினமணி செய்தி எதிரொலியாக கமுதி கண்ணார்பட்டியில் உள்ள சேதமடைந்த பயன்பாடில்லாத பொதுப்பணித்துறை அலுவலகங்களை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
  கமுதி கண்ணார்பட்டியில்  பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அலுவலக வளாகம் உள்ளது. இதில் குண்டாறு வடிநிலை உபகோட்டம், நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம், இருக்கன்குடி நீர்தேக்க திட்ட உப கோட்டம், உதவி செயற்பொறியாளர் அலுவலகம், உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படும் நீரியல் திட்டம்,  நீர் சோதனை கூடம், நீர் ஆதாரம் சிறப்பு திட்ட உப கோட்டம்,இதற்கான உதவி செயற்பொறியாளர் அலுவலகம், கிருதுமால் நதி அத்திகுளம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம் ஆகியவை உள்ளன. இதில் 50-க்கும் மேற்பட்ட பொதுபணிதுறை அதிகாரிகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
  இந்த வளாகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடங்கள் முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. இந்த சேதமடைந்த அலுவலகங்களுக்கு பதிலாக புதிய அலுவலகங்கள் கட்டப்பட்டு இயங்கி வருகின்றன. இந்நிலையில் சேதமடைந்த அலுவலக கட்டடங்களை அகற்ற அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து கடந்த நவ.10 ஆம் தேதி தினமணி நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியானது. 
  இதனை அடுத்து சேதமடைந்த கட்டடங்களை உடனடியாக இடித்து அகற்ற அதிகாரிகள் உதரவிட்டுள்ளனர். இதனால் வியாழக்கிழமை முதற்கட்டமாக வேலையாள்கள் சேதமடைந்த கட்டடங்களில் உள்ள மரங்களை பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பொதுப்பணித்துறை வளாகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் மகிழ்சியில் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com