ஸ்ரீதாயுமானசுவாமி கோயிலில் பிப்.9 இல் மகா கும்பாபிஷேகம்

ராமநாதபுரம் வெளிப்பட்டினத்தில் உள்ள அருள்மிகு தாயுமானசுவாமி கோயிலில் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற

ராமநாதபுரம் வெளிப்பட்டினத்தில் உள்ள அருள்மிகு தாயுமானசுவாமி கோயிலில் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதை முன்னிட்டு வியாழக்கிழமை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 இத்திருக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த 1981 ஆம் ஆண்டு நடந்தது. இதனையடுத்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்திற்கான யாக சாலைகள் அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தின் செயலாளர் ஸ்ரீமத் சத்யானந்த மஹராஜ் தலைமையில் நடந்தது.
  விழாவில், கோயில் நிர்வாகி சுவாமி பரானந்த மஹராஜ், சாரதானந்த மஹராஜ், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் மாதவனூர் கிருஷ்ணன், மூத்த வழக்குரைஞர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி, கட்டட பொறியாளர் கிஷோர் குமார் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com