தங்கச்சிமடம் தூய சந்தியாகப்பர் கோயில் திருவிழா தொடக்கம்
By DIN | Published on : 17th July 2017 09:32 AM | அ+அ அ- |
ராமேசுவரம் தீவு தங்கச்சிமடத்தில் உள்ள தூய சந்தியாகப்பர் திருக்கோயிலின் 475 ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராமேசுவரம் தீவு தங்கச்சிமடத்தில் தூயசந்தியாகப்பர் திருக்கோயில் உள்ளது. இத்திருத்தலத்தின் 475-ஆம் ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. பங்குத்தந்தை செ.ராஜஜெகன் தலைமையில் அருட்தந்தையர்கள் கொடிமரத்தையும், அதில் தூய சந்தியாகப்பரின் உருவம் பதித்த கொடியையும் ஏற்றினர். விழாவினைத் தொடர்ந்து தினசரி மாலை ஆலயத்தில் திருச்செபமாலையும்,நவநாள் திருப்பலியும் நடைபெறுகிறது. வரும் 24 ஆம் தேதி பெருவிழா சிறப்புத் திருப்பலியும்,தூய சந்தியாகப்பரின் தேர்பவனியும் நடைபெறுகிறது. 25 ஆம் தேதி திருவிழா நிறைவு திருப்பலியும், அதனைத் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 3- ஆம் தேதி மதியம் கொடிமர இறக்கமும், அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் திருப்பலியும் நடைபெறுவதோடு விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவர் எம்.கே.அந்தோணி சந்தியாகு மற்றும் தண்ணீர் ஊற்று, அரியான்குண்டு, தென்குடா பகுதிகளை சேர்ந்த இறை மக்களும், புனித தெரசாள் பங்கு ஆலயக் கமிட்டியினரும் செய்து வருகின்றனர்.