வெள்ளை மயில்களை பாதுகாக்கக் கோரிக்கை

கமுதி சுற்றுப் பகுதிகளில் உள்ள அரிய வகை வெள்ளை மயில்களை  வனத்துறையினர் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கமுதி சுற்றுப் பகுதிகளில் உள்ள அரிய வகை வெள்ளை மயில்களை  வனத்துறையினர் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 கமுதி, முதுகுளத்தூர், கடலாடி,சாயல்குடி உள்ளிட்ட வன பகுதிகளில் அரிய வகை  வெள்ளை மயில்கள்   அதிக அளவில் உள்ளன. கடும் வறட்சியின் காரணமாக இவை இரை,  தண்ணீர் தேடி அருகே உள்ள உள்ள கிராமங்களுக்கு சாலைகளைக் கடந்தும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி வந்து செல்கின்றன.
   இந்தியாவில் மிக குறைந்த அளவே இந்த வெள்ளை மயில்களை பாதுகாக்க வனத்துறையினர் போதுமான இரை, தண்ணீர் வைக்க வேண்டும், அவை நடமாடும் பகுதியை சுற்றி வேலி அமைத்து பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று பறவை ஆர்வலர்கள்,  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com