பரமக்குடி பள்ளி கல்லூரிகளில் சர்வதேச யோகா தினம்

பரமக்குடி அரசு கலைக் கல்லூரி ,ஆயிர வைசிய மெட்ரிக் பள்ளி மற்றும் வ.உ.சி.  மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை சர்வதேச யோகா தினம்  கொண்டாடப்பட்டது.

பரமக்குடி அரசு கலைக் கல்லூரி ,ஆயிர வைசிய மெட்ரிக் பள்ளி மற்றும் வ.உ.சி.  மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை சர்வதேச யோகா தினம்  கொண்டாடப்பட்டது.
அரசு கலைக் கல்லூரியில் அறிவுத் திருக்கோயில் மற்றும் மன வளக்கலை மன்றம் சார்பில்  நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் எஸ்.சிவகுமார் தலைமை வகித்தார்.   மனவளக்கலை மன்ற அமைப்பின் தலைவர் ஆர்.ரவீந்திரன்,  செயலாளர் எஸ்.நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 அந்த அமைப்பின் நிர்வாகி கே.முருகேசன் கல்லூரி மாணவர்களுக்கு யோகாசனத்தின் பயன்கள் குறித்து விளக்கவுரையாற்றி யோகாசனம்,  பிரணாயாமம் மற்றும் முத்திரைகள் குறித்து பயிற்சியளித்தார்.
ஆயிரவைசிய மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் ஆர்.முருகானந்தம் தலைமை வகித்தார். செயலாளர் எஸ்.தெட்சினாமூர்த்தி,  பொருளாளர் ஜே.பி.எஸ்.மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பள்ளியின் முதல்வர் ஆர்.ஜெயபிரமிளா வரவேற்றார். பள்ளி நிர்வாக அலுவலர் கே.சதீஸ் யோகாசனம் குறித்து சிபுரையாற்றினார். உடற்கல்வி ஆசிரியர் சரவணகுமார் மாணவர்களுக்கு யோகா பயிற்சியளித்தார். பள்ளி துணை முதல்வர் கவிதா நன்றி கூறினார்.  வ.உ.சி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டாட்சியர் எஸ்.ராஜகுரு தலைமை வகித்தார்.  பள்ளியின் பொருளாளர் ஆர்.எஸ்.ரவிக்குமார், வெள்ளாளர் சபை செயலாளர் முத்துராமலிங்கம், பொருளாளர் ராதாகிருஷ்ணன், துணை வட்டாட்சியர் சடையாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முதல்வர் பி.மகாதேவன் வரவேற்றார்.
யோகா ஆசிரியர் கே.ராஜ்குமார் யோகாசனத்தின் சிபுகள் குறித்துப் பேசி மாணவர்களுக்கு யோகாசன பயிற்சியளித்தார். பள்ளி துணை முதல்வர் பிரேமா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com