தகுதி இல்லாதவர்களுக்கு முதியோர் உதவித் தொகை ரத்து: அதிகாரிகள் நடவடிக்கை

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலுகாவுக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் தகுதி இல்லாதவர்களுக்கு முதியோர் உதவித் தொகை வழங்குவதை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலுகாவுக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் தகுதி இல்லாதவர்களுக்கு முதியோர் உதவித் தொகை வழங்குவதை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டது.
கீழக்கரை சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் கே.எம். தமீம்ராஜா தலைமையில், கீழக்கரை வருவாய் ஆய்வாளர் காளீஸ்வரன், கிராம உதவியாளர் சரவணன், பாண்டி ஆகியோர், கீழக்கரை தாலுகாவுக்கு உள்பட்ட ஏர்வாடி, காட்டுப்பள்ளி தர்கா, வெட்டமனை, ஆதஞ்சேரி, தண்ணீர்ப் பந்தல், கோகுல் நகர் ஆகிய பகுதிகளில் முதியோர் உதவித் தொகை பெறுபவர்கள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து வட்டாட்சியர் கே.எம். தமீம்ராஜா கூறியது: மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜனின் உத்தரவின்படி, பல்வேறு கிராமங்களில் முதியோர் உதவித்தொகை தகுதியானவர்களுக்கு வழங்கப்படுகிறதா எனவும், அரசு நலத்திட்ட உதவிகள் முறையாக சம்பந்தப்பட்டோர்களுக்கு பயன்படுத்தப்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில், தன்னைப் பெற்ற தாயை தனது சகோதரியின் மாமியார் எனக் கூறிய சத்துணவு அமைப்பாளர், காவல் துறையில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து பணி ஓய்வுபெற்றவரின் மனைவி, மின்வாரியத்தில் உதவிப் பொறியாளராக பணிபுரிபவரின் தந்தை உள்ளிட்ட பலர் முதியோர் உதவித் தொகை பெறுவது கண்டு பிடிக்கப்பட்டது.
இவ்வாறு கண்டறியப்பட்டவர்களுக்கு, இம்மாதம் முதல் முதியோர் உதவித்தொகை ஆட்சியரின் உத்தரவின்படி ரத்து செய்யப்படும். வாழ்வாதாரமே இல்லாதவர்களில் தகுதியானவர்கள் மட்டுமே இனம் காணப்பட்டு, அவர்களுக்கு மட்டுமே முதியோர் உதவித்தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த ஆய்வு, கீழக்கரை தாலுகா முழுவதும் தொடர்ச்சியாக நடத்தப்பட இருப்பதாகவும் வட்டாட்சியர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com