பாம்பன் பாலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்: 9 பேர் காயம்

பாம்பன் பாலத்தில் சனிக்கிழமை கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 9 பேர் காயம் அடைந்தனர்.

பாம்பன் பாலத்தில் சனிக்கிழமை கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 9 பேர் காயம் அடைந்தனர்.
தேனியைச் சேர்ந்த கவியரசன் மற்றும் அவரது நண்பர்களின் குடும்பத்தினர் என மொத்தம் 6 பேர் ராமேசுவரத்துக்கு ஒரு காரில் வந்து கொண்டிருந்தனர். இந்த கார் மண்டபத்தில் பாம்பன் பால துவக்கத்தில் வந்து கொண்டிருந்தது. அதேநேரம், எதிரே சண்முகராஜன் என்பவர் ஓட்டிய கார் ராமேசுவரத்திலிருந்து பரமக்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த இரு கார்களும் நேருக்கு நேராக மோதிக் கொண்டன. இந்த விபத்தில், தேனியிலிருந்து வந்த காரில் பயணித்த 6 பேரும், சண்முகராஜன் காரில் வந்த 3 பேரும் என மொத்தம் 9 பேர் லேசான காயங்களுடன் தப்பினர். கார்கள் மோதிய வேகத்தில், தேனியிலிருந்து வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடி பாம்பன் பாலத்தில் உள்ள நடைமேடையில் ஏறி நின்றது. இரு கார்களும் நேருக்கு நேராக மோதிக் கொண்டதால், கார்களின் முன்புறம் சேதமடைந்தன.
தகவலறிந்த பாம்பன் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, காயமடைந்த 9 பேரையும் பாம்பன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் அங்கு சிகிச்சை பெற்று திரும்பினர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பாம்பன் பாலத்தில் 4 விபத்துகள் நடந்துள்ளன. இந்த பாலத்தில் பழைய தார் சாலைக்கு மேலாக புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், சாலையில் வாகனங்கள் பிரேக் பிடிக்கும் போது வழுக்கிச் செல்வதாகவும், அதனால் தான் விபத்துகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதை உடனடியாக சரி செய்யவேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com