ராமநாதபுரத்தில் நாளை முதல் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தொடக்கம்

ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி

ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை முதல் (மே 22) தொடங்க இருப்பதாக, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பொ. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களைச் சேர்ந்த ஊராட்சி, நகராட்சி, அரசு நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் காலியாகவுள்ள நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், தமிழாசிரியர், தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில், பணி மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் ஆகியன குறித்து கலந்தாய்வு நடைபெறுகிறது.
திங்கள்கிழமை, நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல், பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு மற்றும் இவர்களுக்கான ஒன்றியத்துக்குள்பட்ட பொதுமாறுதல் கலந்தாய்வு ஆகியன நடைபெறும். இதேபோல, அன்று காலையிலேயே பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, மாவட்டத்துக்குள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பொதுமாறுதல் கலந்தாய்வும் நடத்தப்படும்.
தொடர்ந்து, 23 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வும் நடைபெறுகிறது.
மே 24 (புதன்கிழமை) இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் நடத்தப்படும். மே 25 இல் இடைநிலை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு(ஒன்றியத்துக்குள்), அதேபோல மாவட்டத்துக்குள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் ஆகியனவும் நடத்தப்பட உள்ளது.
மே 26 (வெள்ளிக்கிழமை) மாவட்டம் விட்டு மாவட்டம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. மே 29, 30 ஆகிய தேதிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) நடத்தப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com