வேளாண் திட்டங்கள் விளக்கக் கூட்டம்

கமுதி அருகே உள்ள 5 ஊராட்சி விவசாயிகளுக்கு அரசு திட்டங்கள் குறித்த விளக்கக் கூட்டம் செவ்வாய்கிழமை வீரமச்சான்பட்டியில் நடைபெற்றது.

கமுதி அருகே உள்ள 5 ஊராட்சி விவசாயிகளுக்கு அரசு திட்டங்கள் குறித்த விளக்கக் கூட்டம் செவ்வாய்கிழமை வீரமச்சான்பட்டியில் நடைபெற்றது.
கூட்டத்தில், கமுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எல். முகமதுசித்திக் தலைமைவகித்துப் பேசியதாவது: இப்பகுதிகளில் அதிக அளவில் மானாவாரி பயிர்களை சாகுபடி செய்யலாம். 1 ஏக்கரிலிருந்து 5 ஏக்கர் வரை உள்ள விவசாயிகளுக்கு உளுந்து, மிளகாய் விதைகள், தேவையான உரங்கள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட உள்ளது.   இதில் வீரமாச்சான் பட்டி, திம்மநாதபுரம், டி.வாலசுப்ரமணியபுரம், பெருநாழி, பாப்புரெட்டியாபட்டி உள்ளிட்ட 5 ஊராட்சிகளில் 2500 ஹெக்டர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கமுதி வேளாண்மைத் துறையும், அருப்புக்கோட்டை சீட்ஸ் தொண்டு நிறுவனமும் இனைந்து நடத்தின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com