கந்துவட்டிக்காரர்களுக்கு போலீஸார் உதவினால் கடும் நடவடிக்கை: ராமநாதபுரம் எஸ்பி எச்சரிக்கை

கந்து வட்டிக்காரர்களுக்கு காவல்துறையினர் உதவியதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்தார்.

கந்து வட்டிக்காரர்களுக்கு காவல்துறையினர் உதவியதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில், கந்து வட்டிக்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்புகுறைதீர் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் கந்து வட்டி வாங்குவோர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் பலரும் ஒத்துழைப்பு கொடுப்பதாகவும், அதை தடுத்து நிறுத்தவேண்டும் எனக் கூறிசம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயரைச்சொல்லிசிலர்புகார் அளித்தனர். புகார்களைப் பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 
பின்னர் செய்தியாளர்களிடம்அவர் கூறியது: கந்து வட்டிக்காரர்களால் பாதிக்கப்படுவோரை பாதுகாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் 8 பேர் புகார் செய்துள்ளனர். 
கந்து வட்டி வாங்குவோர்களுக்குஉதவி செய்யும் அல்லது ஒத்துழைப்பு வழங்கும்காவல் துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கந்து வட்டி புகாரைப் பொறுத்தவரை இரு தரப்பினரையும் விசாரித்து ஆவணங்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் உட்கோட்டங்கள் அளவிலும் கந்து வட்டிகளால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். தனியார் நிதி நிறுவனங்கள்,இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் மீது புகார்கள் வரப்பெற்று,அது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை பூட்டி சீல் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கந்து வட்டி வாங்கக்கூடாது என பொதுமக்களுக்கு காவல்துறை மூலம் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு முகாம்களையும் நடத்தி வருகிறோம். அடமானகடன்களுக்கு 9சதவிகித வட்டியும்,மற்ற கடன்களுக்கு 12 சதவிகிதம் வட்டியும் மட்டுமே வாங்க வேண்டும் என்பது சட்டமாகும். இதை மீறுவோர் மீது புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். வட்டிக்கு கடன் வாங்குவோர் கடன் வாங்கும் போதும் அதை செலுத்தும் போதும் உரிய ஆவணங்களை வைத்துக் கொள்ள வேண்டியதும் மிகவும் அவசியமாகும் என்றார்.
போலீஸ் அதிகாரி பெயரைக்கூறி மிரட்டும் பெண்
இம்முகாமில் பங்கேற்ற ராமநாதபுரம் ஓம்சக்தி நகரை சேர்ந்த பானுப்பிரியாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்,கந்து வட்டி வாங்கும் ஜனதா காளீஸ்வரி என்ற பெண் ஒரு உயர் போலீஸ் அதிகாரியின் பெயரைச் சொல்லி,வட்டி ஒழுங்காக் கொடுக்கவில்லையெனில் சுட்டுக் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாலும்,தாக்கியதாலும் தனது கணவரைகடந்த 3 மாதங்களாகக் காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர்.கணவரை கண்டுபிடித்துத்தருமாறு கண்ணீருடன் புகார் தெரிவித்தது முகாமுக்கு வந்திருந்த பலரையும் கவலையளிக்கச் செய்தது.சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி தொடர்பாக புகார் செய்தால் நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி. உறுதியளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com