குண்டுகுளம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கமுதி அருகே குண்டுகுளம் கிராமத்தில் அரசு நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கான கமுதி குறுவள மைய அளவிலான அறிவியில் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கமுதி அருகே குண்டுகுளம் கிராமத்தில் அரசு நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கான கமுதி குறுவள மைய அளவிலான அறிவியில் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குண்டுகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற கண்காட்சிக்கு தலைமை ஆசிரியர் பா.சசுதாகர் தலைமைவகித்தார். இந்கிழ்சியில் பம்மனேந்தல், கே.வேப்பங்குளம், குண்டுகுளம், வண்ணாங்குளம், செந்தனேந்தல், பூமாவிலங்கை உள்ளிட்ட 9 கிராமங்களைச்சேர்ந்த பள்ளி மாணவர்கள் தங்களின் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.இதில் பாம்பன் தூக்கு பாலம், மாசுக்கட்டுப்பாடு, தூய்மை இந்தியா வீடு, பாரம்பரிய தானிய உணவுகள் என மாணவர்கள் தங்களின் அறிவியல் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் நடுநிலைப் பள்ளி அளவில் குண்டுகுளம் பள்ளி முதல் இடத்தையும், பம்மனேந்தல் பள்ளி இராண்டாம் இடத்தையும் , கே,வேப்பங்குளம் பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றது. தொடக்கப்பளிளி அளவில் முதல் பரிசை வண்ணாங்குளம் பள்ளியும், இரண்டாம் பரிசு பம்மனேந்தல் பள்ளியும், மூன்றாம் பரிசு செந்தனேந்தல் பள்ளியும் பெற்றது.செங்கப்படை ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் லெட்சுமணன் வெற்றி பேற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை குண்டுகுளம் பள்ளி பள்ளி ஆசிரியர்கள் கண்ணப்பன், முத்துமுணியான்டி, தெனியல் பிரபாகரன் உள்ளிட்டோர்செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com