தேவகோட்டை ரஸ்தா குப்பைக் கிடங்கை மாற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தா பகுதியில் உள்ள நகராட்சிக் குப்பை சேமிப்புக்கிடங்கை வேறு பகுதிக்கு மாற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தா பகுதியில் உள்ள நகராட்சிக் குப்பை சேமிப்புக்கிடங்கை வேறு பகுதிக்கு மாற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி நகராட்சிக் குப்பை சேமிப்புக்கிடங்கும், தேவகோட்டை நகராட்சிக் குப்பை சேமிப்புக்கிடங்கும் தேவகோட்டை ரஸ்தா பகுதியில் உள்ளன. இங்கு இரண்டு நகரங்களில் சேமிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால், மலைபோல் குப்பைகள் குவிகின்றன.
மழைக் காலங்களில் இப்பகுதியில் துர் நாற்றம் வீசுவதால் இப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளான தேவகோட்டை ரஸ்தா, காதி நகர், நாகவயல் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் குப்பை கிடங்கை மாற்றக்கோரி காரைக்குடி-தேவகோட்டை சாலையில் உள்ள குப்பைக் கிடங்கு முன்பாக திங்கள்கிழமை மனிதச்சங்கிலிப் போராட்டம் நடத்தினர். அப்போது தேவகோட் டையிலிருந்து குப்பை கொட்ட வந்த நகராட்சி குப்பை அள்ளும் வாகனத்தை மறித்து எதிர்ப்புத் தெரி வித்தனர். அதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்ததும் தேவகோட்டை சார்-ஆட்சியர் ஆஷா அஜித், காரைக்குடி நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள், காரைக்குடி டி.எஸ்.பி கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடேயை பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 15 நாள்கள் கால அவகாசத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததால் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com