பெற்றோர்கள், ஆசிரியர்கள் அடிப்பதாக 136 குழந்தைகள் புகார்: ராமநாதபுரம் சைல்டுலைன் அமைப்பு தகவல்

பெற்றோர், ,ஆசிரியர்கள் அடிப்பதாக 138 குழந்தைகள் சைல்டு லைன் அமைப்பில் புகார் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர், ,ஆசிரியர்கள் அடிப்பதாக 138 குழந்தைகள் சைல்டு லைன் அமைப்பில் புகார் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் எஸ்.சகுந்தலா,சைல்டுலைன் இயக்குநர் எஸ்.கருப்பசாமி ஆகியோர் இணைந்து சைல்டுலைன் அலுவலகத்தில்திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
ஆண்டு தோறும் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு சைல்டுலைன் உங்கள் நண்பன் என்ற நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.இதில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும்,ஆதரவற்ற குழந்தைகளுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதை விளக்கும் வகையிலும் இந்நிகழ்ச்சிகள் நடைபெறும்.சைல்டுலைன் என்பது தேசிய அளவில் குழந்தைகளுக்காக 24 மணி நேரமும் செயல்படும் ஒர் அமைப்பாகும்.இதற்கான இலவச அவசர தொலைபேசி சேவை 1098. இத்தொலைபேசி குறித்து பொதுமக்களுக்கும் முக்கியமாக குழந்தைகளுக்கும் போதுமான விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2016 முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான நிதியாண்டில் மட்டும் மாவட்டத்தில் ஆசிரியர் அடித்ததாக 64 பேரும்,பெற்றோர்கள் அடித்ததாக 74 பேரும் இலவச தொலைபேசி எண் 1098 இல் புகார் செய்துள்ளனர்.அவர்களது புகார்களின் அடிப்படையில் அவர்களது இருப்பிடங்களுக்கே சென்று குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்நிதியாண்டில் மட்டும் குழந்தை தொழிலாளர்கள் 30 பேர், பிச்சையெடுத்த குழந்தைகள் 23 பேர்,பள்ளியில் படிப்பை பாதியில் நிறுத்தியதாக இனம் காணப்பட்ட குழந்தைகள் 69 பேர்,பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் 11 பேர்,வீட்டை விட்டு ஓடிப்போன குழந்தைகள் 76 பேர் ஆகியோர் சைல்டுலைன் அமைப்பின் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு கடந்த ஆண்டு 2428 அழைப்புகள் வந்துள்ளன.17 குழந்தைகளை காணவில்லையென தகவல் வந்து அவர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.மருத்துவ உதவி 40பேருக்கும்,கல்வி உதவி 136 பேருக்கும்,காப்பக வசதி 22 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது ஒரு சவாலாகவே இருந்து வருகிறது.இதற்காக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், கூட்டங்கள் நடத்தியும் மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படவில்லை.
கடந்த ஆண்டு 94 குழந்தை திருமணங்களும்,இந்த ஆண்டு 80 குழந்தை திருமணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என்றனர்.
முன்னதாக சைல்டுலைன் அமைப்பின் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஸ்டிக்கரை மாவட்ட சமூக நல அலுவலர் எஸ்.குணசேகரி வெளியிட அதனை குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் எஸ்.சகுந்தலா பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் டி.துரைமுருகன்,சைல்டுலைன் அமைப்பின் துணை இயக்குநர்கள் எஸ்.தேவராஜ்,எம்.மன்னர் மன்னன் ஆகியோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com