ராமநாதபுரத்தில் விவசாயிகள் சாலை மறியல்: 54 பேர் கைது

ராமநாதபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதிங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் 54 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதிங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் 54 பேர் கைது செய்யப்பட்டனர்.
 ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற சாலை மறியலுக்கு சங்கத்தின்மாவட்ட செயலாளர் வி.மயில்வாகனன்,தாலுகா செயலாளர் பி.கல்யாணசுந்தரம் ஆகியோர் தலைமை வகித்தனர்.மாவட்ட செயலாளர் எம்.முத்துராமு முன்னிலை வகித்தார். இதில், பயிர்க்காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகையை காலதாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க வேண்டும்,கடன் பெற்ற விவசாயிகளுக்கு 100 சதவிகித இழப்பீட்டுத் தொகை வழங்கவேண்டும், தனியார் காப்பீடு நிறுவனங்களை காப்பீட்டுத் திட்டத்தில் அனுமதிக்கக் கூடாது, கடந்த ஆண்டில் விடுபட்ட விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணத் தொகை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மறியலில்ஈடுபட்ட12 பெண்கள் உள்பட 54 பேரை காவல்துறையினர்கைது செய்தனர். 
போராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ஏ.ராமமூர்த்தி,எஸ்.பூமிநாதன்,சி.நாகரெத்தினம், எஸ்.சுந்தர்ராஜன்,எம்.ராமசாமி ஆகியோர் உள்பட விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com