ராமநாதபுரம் அருகே எருதுகட்டு காளை சாவு: கிராமத்தினர் அஞ்சலி

ராமநாதபுரம் அருகே காஞ்சிரங்குடி கிராமத்தில்திங்கள்கிழமை உயிரிழந்த எருதுகட்டு காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

ராமநாதபுரம் அருகே காஞ்சிரங்குடி கிராமத்தில்திங்கள்கிழமை உயிரிழந்த எருதுகட்டு காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
   ராமநாதபுரம் மாவட்ட எருதுகட்டு நடத்துவோர் சங்கத்தின் தலைவராக இருந்து வருபவர் ஆதித்தன். ராமநாதபுரம் அருகே காஞ்சிரங்குடிகிராமத்தைச்சேர்ந்தஇவர் சொந்தமாக எருதுகட்டுகாளை வளர்த்து வந்தார். இந்த காளை கிராமத்துக்குபெருமை சேர்க்கும் வகையில் எருது கட்டு நிகழ்ச்சிகளில் பலமுறை வெற்றிகள் பெற்றிருந்ததாம். 
  இந்த  நிலையில் இந்த காளை ஞாயிற்றுக்கிழமை இரவு உடல்நலக் குறைவால் உயிரிழந்தது. இதனையடுத்து காளையின் உடல் ஆதித்தன் இல்லத்தில் கிராமமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது.காளைக்கு ஆதித்தன் சால்வையும்,மலர் மாலைகளும் அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.அதனைத் தொடர்ந்து கிராம மக்களும்,சுற்று வட்டார கிராம மக்களும் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலிக்குப் பின்னர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com