ராமநாதபுரம்-காரைக்குடி சாலையை  புதுப்பிக்க  ரூ.452 கோடியில் ஒப்பந்தம்:நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்

ராமநாதபுரத்திலிருந்து காரைக்குடி வரையிலான சாலை அமைக்கும் பணி ரூ.452 கோடி மதிப்பில் விரைவில் துவங்க இருப்பதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

ராமநாதபுரத்திலிருந்து காரைக்குடி வரையிலான சாலை அமைக்கும் பணி ரூ.452 கோடி மதிப்பில் விரைவில் துவங்க இருப்பதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.
   ராமநாதபுரத்தில் இது குறித்து அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
     ராமநாதபுரத்திலிருந்து காரைக்குடி வரையிலான சாலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், வாகன ஓட்டிகள் மிகுந்த இடையூறுகளை சந்திப்பதாகவும் பல்வேறு புகார்கள் வந்தன.இதனைத் தொடர்ந்து ராமநாதபுரத்திலிருந்து காரைக்குடி வரையிலான சாலை ரூ.452 கோடி மதிப்பில் இரட்டை வழிச்சாலையாக புதுப்பிக்கப்பபடவுள்ளது. இத்திட்டத்தில், தேவகோட்டை, புளியால், சி.கே.மங்கலம் மற்றும் மங்கலம் ஆகிய 4 ஊர்களுக்கு குறுக்குச்சாலைகள்,   தேவிபட்டிணம், சின்னக்கீர மங்கலம், சருகனி சாலை ஆகிய 3 இடங்களில் மேம்பாலங்கள், தேவகோட்டை ரஸ்தாவில் ஒரு ரயில்வே மேம்பாலம் அமைப்பு ஆகியவையும் அடங்கும்.  ராமநாதபுரம் கிழக்கு கடற்கரைச்சாலையில் இருந்து 80 கி.மீ. தூரம் இப்பணிகள் நடைபெறும். 10 நாள்களுக்குள் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளது.  இதற்கான ஒப்பந்தத்தில் ராமநாதபுரம் வி.எம்.அன் கோ நிறுவனம் கையெழுத்திட்டுள்ளனது. இந்தச்சாலைப் பணிகள் இரண்டரை வருடங்களில் முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. சாலைப்பணியை மேற்கொள்ளும் வி.எம்.அன் கோ நிறுவனமே 4 ஆண்டுகளுக்கு சாலையை பராமரித்து ஒப்படைக்குமாறு  ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com