23 பேருக்கு சுய தொழில் பயிற்சி

ராமநாதபுரத்தில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 23 பேருக்கு சுய தொழில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 23 பேருக்கு சுய தொழில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

 இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் நடைபெற்ற 6 நாள்கள் பயிற்சி வகுப்பு  புதன்கிழமை  நிறைவு பெற்றது. பயிற்சி  முடித்த 23 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்சியில் பாண்டியன்  கிராம  வங்கியின்  மூத்த   மேலாளர்  குசேலன்  தலைமை  வகித்தார். உதவி  மேலாளர் அருண்,  கதர் கிராமத்  தொழில்கள் வாரிய  மேலாளர்  ரஹ்மான், பயிற்சியாளர்  கலைவாணன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம்  மாவட்டத்  தொழில் மைய  மேலாளர்  ப.மாரியம்மாள்,  23 பேருக்கும்  சான்றிதழ்  வழங்கிப்  பேசினார். பயிற்சி மைய  இயக்குநர்  ஆர்.சியாமளா நாதன் அனைவரையும்  வரவேற்றார். நிறைவாக  பயிற்சி  மைய  ஆசிரியர்  வி.ராமலெட்சுமி  நன்றி  கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com