ராமேசுவரத்தில் பழமையான 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

ராமேசுவரம் அடுத்துள்ள உச்சிப்புளி பகுதியில் கிணற்றை தூர்வாரியபோது, பழமையான 3 ஐம்பொன் சிலைகள் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ராமேசுவரம் அடுத்துள்ள உச்சிப்புளி பகுதியில் கிணற்றை தூர்வாரியபோது, பழமையான 3 ஐம்பொன் சிலைகள் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
    ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி பேருந்து நிறுத்தத்தின் பின்புறம் 50 ஆண்டுகள் பழமையான கிணறு உள்ளது. இந்தக் கிணற்றை தூர்வாரும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின. அப்போது,  மூன்று ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
    இது குறித்து வருவாய்த் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
  சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், சிலையை ஆய்வு செய்தனர். முதல் சிலை 12 செ.மீ., இரண்டாவது சிலை 8 செ.மீ., மூன்றாவது சிலை 5 செ.மீ. உயரமும் இருந்தன.
     இதில் ஒன்று காமாட்சி அம்மன் சிலை, மற்ற இரண்டு சிலைகள் குறித்த முழுமையான
தகவல்கள் தெரியவில்லை. மேலும், இந்த சிலைகள் 50 ஆண்டுகளுக்கு முந்தைய சிலைகளாக இருக்கக்கூடும் என்பதால், ராமநாதபுரம் வருவாய்த் துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
  சிலைகள் குறித்து, தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்ய உள்ளதாக, அதிகாரி ஒருவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com