விருச்சுழி ஆற்றில் மணல் குவாரி திறக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு : 60 லாரிகள் சிறை பிடிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே விருச்சுழி ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை 60க்கும் மேற்பட்ட லாரிகளை கிராம மக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே விருச்சுழி ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை 60க்கும் மேற்பட்ட லாரிகளை கிராம மக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாடானை அருகே நீர்குன்றம், கட்டவிளாகம், கூகுடி உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாயும் விருச்சுழி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் திங்கள்கிழமை மணல் குவாரியை அதிகாரிகள் திறக்க வந்தனர். அப்போது குவாரியை திறக்க விடாமல் தடுத்த பொதுமக்கள் பொக்லைன், ஜேசிபி இயந்திரம் மற்றும் 60- க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்தனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
தகவலறிந்த திருவாடானை வட்டாட்சியர் சாந்தி, காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து குவாரி அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அதிகாரிகள் அனைவரும் திரும்பிச் சென்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், இங்கு மணல் குவாரி அமைக்கும் பணியை மேற்கொள்ள முற்பட்டபோது அமைக்கக் கூடாது என போராட்டம் நடத்தினோம். ஆனால் மீண்டும் குவாரி
அமைக்கும் பணியை மேற்கொள்கின்றனர்.
மேலும் இங்கு குவாரி அமைக்க முற்பட்டால் கடுமையான போராட்டங்களை சந்திக்க நேரிடும் என தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com