வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி ரூ.1.50 லட்சம் மோசடி: போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆட்சியரிடம் புகார்

வெளிநாட்டுக்கு தனது மகனை அனுப்புவதாக கூறி ரூ.1.50 லட்சத்தை பெற்றுக் கொண்டு திருப்பித் தராதவர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தாயும், மகனும் ஆட்சியரிடம்

வெளிநாட்டுக்கு தனது மகனை அனுப்புவதாக கூறி ரூ.1.50 லட்சத்தை பெற்றுக் கொண்டு திருப்பித் தராதவர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தாயும், மகனும் ஆட்சியரிடம்
திங்கள்கிழமை புகார் அளித்தனர்.
ராமேசுவரம் புதுரோடு சுனாமி காலனியில் வசித்து வரும் மீனவர் முனியசாமி. இவரது மனைவி சண்முகவள்ளியும், மகன் மாரிக்கண்ணனும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். இவர்களில் சண்முகவள்ளி ஆட்சியரிடம் கொடுத்துள்ள புகார் மனு:
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவுக்கு உள்பட்ட கீழத்தூவலைச் சேர்ந்தவர் முனீஸ்வரன்(30)இவரிடம் என் மகன் மாரிக்கண்ணன் சிங்கப்பூர் செல்வதற்காக ரூ.1.50 லட்சத்தை கொடுத்திருந்தார்.அவர் சொன்னபடி மகனை சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கவில்லை. இத்தொகையை திருப்பிக் கேட்டதற்கு அதை தராமல் காலம் தாழ்த்துகிறார்.
நாங்கள் வட்டிக்கு கடன் வாங்கி மகனை வெளிநாட்டுக்கு அனுப்ப பணம் கொடுத்த நிலையில் கடனுக்கான வட்டி உயர்ந்து கொண்டே போகிறது. வாங்கிய கடனையும் திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறோம்.எனவே முனீஸ்வரனிடமிருந்து பணத்தைப் பெற்றுத் தருமாறு ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பலமுறை புகார் செய்தும் அவர்கள் பணத்தைப் பெற்றுத்தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முனீஸ்வரனை மாவட்டக் குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து அவரே தன் கைப்பட பணம் பெற்றது உண்மை தான், அத்தொகையை விரைவில் கொடுத்து விடுகிறேன் என்று எழுதிக் கொடுத்துள்ளார். அந்தக் கடிதத்தை காவல்துறையினரிடம் நாங்கள் கேட்டபோது அதையும் தர மறுக்கிறார்கள். எனவே முனீஸ்வரனிடம் நாங்கள் கொடுத்த தொகை ரூ.1.50 லட்சத்தையும் உடனடியாக பெற்றுத் தருமாறு புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com