பரமக்குடி அருகே வைகையில் மணல் திருட முயற்சி: ஜேசிபிஇயந்திரம் பறிமுதல்- ஓட்டுநர் கைது

பரமக்குடி அருகே மந்திவலசை வைகை ஆற்றுப்பகுதியில் வெள்ளிக்கிழமை மணல் திருட பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டரர்.

பரமக்குடி அருகே மந்திவலசை வைகை ஆற்றுப்பகுதியில் வெள்ளிக்கிழமை மணல் திருட பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டரர்.
பரமக்குடி ஒன்றியம் மந்திவலசை ஆற்றுப்படுகையில் தொடர்ந்து லாரி மற்றும் டிராக்டர்களில் மணல் கடத்தி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பரமக்குடி தாலுக காவல் ஆய்வாளர் பவுல்பாண்டி போலீஸாருடன் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது, முறைகேடாக மணல் திருடுவதற்காக மந்திவலசை விளக்குச் சாலையில் தயார் நிலையிலிருந்த ஜே.சி.பி. இயந்திரத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் ஆய்வாளர் பவுல்பாண்டி
அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, ஜேசிபி ஓட்டுநர் வனங்கானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சபரிநாதன் மகன் அகஸ்தியன் (32) என்பவரைக் கைது செய்தனர். ஜேசிபி வாகனத்தை கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com