ராமநாதபுரம் கோ-ஆப்டெக்ஸில் தங்கமழை பரிசுத் திட்டம்: விற்பனை இலக்கு ரூ.1 கோடி

ராமநாதபுரம் கோ.ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் செப்.15 ஆம் தேதி முதல் வரும் 2018 பிப்ரவரி வரை வரை தங்கமழை பரிசுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் கோ.ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் செப்.15 ஆம் தேதி முதல் வரும் 2018 பிப்ரவரி வரை வரை தங்கமழை பரிசுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் கோ.ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் வெள்ளிக்கிழமை தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழக அரசு கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க ஆண்டு தோறும் பண்டிகைக் காலங்களில் 30 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பண்டிகையை முன்னிட்டு பல வர்ணங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் பலவித வடிவமைப்புகளில் பருத்தி, பட்டுச் சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறை ஆகியனவும் தீபாவளிக்காக கொண்டுவரப்பட்டுள்ளன.
உடல் நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்ப ரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை முறையில்
விளைவிக்கப்பட்ட பருத்தியைக் கொண்டு இயற்கை சாயமிட்ட ஆர்கானிக் புடவை ரகங்கள் விற்பனைக்கு உள்ளன. பாரம்பரிய ரகங்களைப் புதுப்பிக்கும் விதமாக கண்டாங்கி சேலைகள், செட்டிநாடு சேலைகள், கைத்தறி சுங்குடி சேலைகள் ஆகியனவும் பண்டிகைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. இவை தவிர லினன் சட்டைகள், லினன் பருத்தி சட்டைகள் ஆகியனவும் கண்ணைக் கவரும் வர்ணங்களில் விற்பனைக்காக தயாராக வைக்கப்பட்டுள்ளன.
மேலும் செப்.15 முதல் வரும் 2018 பிப்ரவரி வரை ராமநாதபுரம் கோ.ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தங்கமழை பரிசுத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள துணி ரகங்களுக்கு ஒரு கூப்பன் வழங்கப்பட்டு அந்தக்கூப்பனில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிகச்சிறந்த பதிலளிக்கும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தங்கக்காசுகள் பரிசாக வழங்கப்படவுள்ளது. ராமநாதபுரம் விற்பனை நிலையத்தின் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.81.63 லட்சமாகும்.
இந்த ஆண்டுக்கான விற்பனை குறியீடாக ரூ.1.03 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தரமான கைத்தறி ஆடை ரகங்களைப் பெற்று பயனடைவதன் மூலம் கைத்தறி நெசவாளர்களையும் ஊக்குவித்திட வாய்ப்பாக அமையும் என்றார்.
கோ.ஆப்டெக்ஸ் ஜவுளி விற்பனை நிறுவனத்தின் மண்டல மேலாளர் எம்.சண்முகசுந்தரம், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வி.ஜி.அய்யான், எம்.சுந்தரி, துணை மண்டல மேலாளர் பி.ஸ்டாலின், மேலாளர் எம்.பழனிச்சாமி உள்பட அரசு அலுவலர்கள், கோ.ஆப்.டெக்ஸ் பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com