கல்லூரி விரிவுரையாளர்களுக்கான எழுத்துத் தேர்வு: 1,444 பேர் பங்கேற்பு

ராமநாதபுரத்தில் அரசின் பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்களுக்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் சனிக்கிழமை நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் 1,444 பேர் பங்கேற்றனர்.

ராமநாதபுரத்தில் அரசின் பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்களுக்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் சனிக்கிழமை நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் 1,444 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், அரசு தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கான தேர்வு, ராமநாதபுரத்தில் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுத 1,772 பேருக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது.
ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் 220 பேர், புனித அந்திரேயா மேல்நிலைப் பள்ளியில் 306 பேர், சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் 247 பேர், டி.டி.விநாயகர் மேல்நிலைப் பள்ளியில் 249 பேர், செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் 225 பேர், சுவார்ட்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 197 பேர் என மொத்தம் 6 இடங்களில் நடந்த எழுத்துத் தேர்வில் 1,444 பேர் பங்கேற்றனர்.
இத்தேர்வினை கண்காணிக்க பறக்கும்படையும் அமைக்கப்பட்டிருந்தது. தேர்வு பணிகள் அனைத்தும் விடியோ கேமரா மூலமாகவும் பதிவு செய்யப்பட்டது.
தேர்வு எழுதுவோருக்கு தேவையான அடிப்படை வசதிகளும் அந்தந்த தேர்வு மையங்களில் செய்யப்பட்டிருந்தன. ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடந்த எழுத்துத் தேர்வினை, மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் நேரில் ஆய்வு செய்தார். ஆட்சியருடன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. முனுசாமியும் சென்றிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com