தேவகோட்டையில் வாகன நிறுத்தமாகும் சாலை ஓரங்கள்: பொதுமக்கள் அவதி

தேவகோட்டை நகரில் ஒத்தக்கடை முதல் ராம்நகர் வரை சாலை ஓரங்களில் அனுமதியின்றி வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

தேவகோட்டை நகரில் ஒத்தக்கடை முதல் ராம்நகர் வரை சாலை ஓரங்களில் அனுமதியின்றி வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
தேவகோட்டை நகராட்சியில் மிகவும் முக்கியமான சாலையாக விளங்குவது திருப்பத்தூர் சாலை. இந்த சாலையில் தான் பள்ளிகள், தனியார் மருத்துவமனைகள், பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த சாலையில் தினமும் பள்ளிக்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் பல ஆயிரக்கனக்கான மக்கள் இருசக்கர வாகனங்களிலும், நான்கு சக்கர வாகனங்களிலும், நடந்தும் செல்கின்றனர்.
இந்நிலையில் இந்த சாலையின் ஓரங்களில் பல்வேறு கனகரக வாகனங்களான லாரிகள், மினிலாரிகள், பல்வேறு தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் காலை சைக்கிளில் செல்லும் போது சாலையின் ஓரங்களில் செல்ல இயலாமல் தவிக்கின்றனர். யூனியன் பேருந்து நிறுத்தம் அருகில் பலர் வாகனங்களில் இருந்து விழும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து அனுமியின்றி நிறுத்தப்படும் வாகனங்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தேவகோட்டை நகர் போக்குவரத்து காவல்துறை துணை ஆய்வாளர் முருகேசன் கூறுகையில், தேவகோட்டை பள்ளிகள் உள்ள இடங்களின் வாயில்களில் தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் காவலர்கள் போக்குவரத்து சரிசெய்கின்றனர். அதனை தொடர்ந்தே மற்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் சிரமம் ஏற்படாத வகையில் வாகனங்கள் நிறுத்தாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com