தொண்டி பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு தீவிரம்: குப்பையை நீர்நிலைகளில் கொட்டினால் அபராதம்

தொண்டி பேரூராட்சியில் குப்பைகளை நீர்நிலைகள் மற்றும் கழிவு நீர் வடிகால் ஆகியவற்றில் கொட்டினால் அவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கபடும் என பேரூராட்சி செயல் அலுவலர்

தொண்டி பேரூராட்சியில் குப்பைகளை நீர்நிலைகள் மற்றும் கழிவு நீர் வடிகால் ஆகியவற்றில் கொட்டினால் அவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கபடும் என பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி தெரிவித்தார்.
தொண்டி பேரூராட்சி பகுதியில் டெங்கு மற்றும் வைரஸ் ஒழிப்பில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை தொண்டி பேரூராட்சியும் ஆரம்ப சுகாதாரம் நிலையமும் எடுத்து வருகின்றன.
மேலும் தற்போது மழைகாலம் ஆரம்பிக்க இருப்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தொண்டி பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டார். தொண்டி பேரூராட்சி உள்பட்ட பகுதியில் பொதுமக்கள் தங்களது விடுகளில் சேகரிக்கபடும் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து வீடு தேடி வரும் பணியாளர்களிடம் சேர்க்க வேண்டும். கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுவது,வடிகால்,வாருகால்,நீர்நிலைகள்,கழிவு நீர் வாய்க்காள் ஆகியவற்றில் குப்பைகளை கொட்டக் கூடாது மீறி கொட்டினால். அவர்கள் இனம் கண்டறியபட்டால் அவர்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதர சட்டம் 1993 மாநில சட்டம்(1993)பிரிவு 269ன் கீழ் சிறைதண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com