கமுதி அருகே 6 மாதங்களாக பூட்டிக் கிடக்கும் நூலகம்: மாணவர்கள் தவிப்பு

கமுதி அருகே அரசு நூலக கட்டடம் 6 மாதங்களாக  பூட்டிக்கிடப்பதால் போட்டித் தேர்வுக்கு புத்தகங்களை பயன்படுத்த முடியாமல் மாணவர்கள், இளைஞர்கள் தவித்து வருகின்றனர்.

கமுதி அருகே அரசு நூலக கட்டடம் 6 மாதங்களாக  பூட்டிக்கிடப்பதால் போட்டித் தேர்வுக்கு புத்தகங்களை பயன்படுத்த முடியாமல் மாணவர்கள், இளைஞர்கள் தவித்து வருகின்றனர்.
  ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள காவடிபட்டியில் 2004 ஆம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் 11 லட்சத்து ரூ.8 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு நூலக கட்டிடம் கட்டபட்டு இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரபட்டது. மாணவர்கள்,இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் அரியவகை புத்தகங்கள் நூற்று கணக்கில் உள்ளன.  இந்நூலகத்தை செயல்படுத்த ஊழியர் ஒருவர்  ஊராட்சி சார்பில் நியமிக்கப்பட்டிருந்தாராம். ஆனால் நிதிப்பற்றாக்குறை காரணமாக 6 மாதங்களுக்கு ஊழியர் பணியில் இருந்து நிறுத்தப்பட்டதால்  நூலகம் தொடர்ந்து திறக்கபடாமல், பூட்டியே உள்ளது.
 இதனால்  போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும்  பள்ளி, கல்லூரி மாணவர்கள்,இளைஞர்கள் புத்தகங்களுக்காக 10 கி.மீ., தூரமுள்ள கமுதிக்கு பயணிக்கும் கட்டாயம் உள்ளது. மாணவர்கள், இளைஞர்களின் நலன்கருதி பூட்டி கிடக்கும் நூலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com