ஏப்.24-இல் அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம்: ராமநாதபுரம் ஆட்சியர் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வரும் 24-ஆம் தேதி சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற இருப்பதாக ஆட்சியர் எஸ்.நடராஜன் சனிக்கிழமை தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வரும் 24-ஆம் தேதி சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற இருப்பதாக ஆட்சியர் எஸ்.நடராஜன் சனிக்கிழமை தெரிவித்தார்.
 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு ஆட்சியர் எஸ்.நடராஜன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:
 மத்திய அரசு, பின்தங்கிய நிலையில் உள்ள கிராமங்களில் ஏப்.14 முதல் மே 5 ஆம் தேதி வரை கிராம சுவராஜ் அபியான் எனும் கிராம சுயாட்சி இயக்ககத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளையும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, மாவட்டத்தில் 34 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றை அனைத்து நிலைகளிலும் தன்னிறைவு பெற்ற கிராமங்களாக உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
 இக்கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் திட்டம், இலவச எரிவாயு வழங்கும் திட்டம், அனைவருக்கும் வங்கிக்கணக்கு துவங்கும் திட்டம், விபத்துக் காப்பீடு மற்றும் உயிர்க்காப்பீட்டுத் திட்டங்கள், தடுப்பூசி போடும் திட்டம், எல்.இ.டி.பல்புகள் வழங்கும் திட்டம் என 7 வகையான திட்டங்களை 100 சதவீதம் செயல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 ஏப்.24 ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெறும். மேலும் கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளும், ஏப்.30 ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். 
மே 2 ஆம் தேதி வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மே 5 ஆம் தேதி மாவட்டம் மற்றும் வட்டார அளவில் திறன் மேம்பாட்டு மேளா நடத்தப்பட உள்ளது என்றார்.
 முன்னதாக ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 4 பேருக்கு விலையில்லா தையல் இயந்திரங்களை ஆட்சியர் வழங்கினார். விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஹென்சி.லீமா அமாலினி, பிற்பட்டோர் நல அலுவலர் வ.முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் காளிமுத்து, மாவட்ட சமூக நல அலுவலர் குணசேகரி, மாவட்ட வழங்கல் அலுவலர் மதியழகன் உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com