மானியத்துடன் தொழில் தொடங்க ஊக்குவிப்பு முகாம்கள் 

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வரும் 18 ஆம் தேதியும், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 25-ஆம் தேதியும் மானியத்துடன் தொழில் தொடங்க ஊக்குவிப்பு முகாம் நடைபெற உள்ளது.

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வரும் 18 ஆம் தேதியும், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 25-ஆம் தேதியும் மானியத்துடன் தொழில் தொடங்க ஊக்குவிப்பு முகாம் நடைபெற உள்ளது.
 இதுகுறித்து ராமநாதபுரம் ஆட்சியர் எஸ்.நடராஜன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 75 பேருக்கு மானியமாக ரூ.45 லட்சம் வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வியாபாரம் செய்வதாக இருந்தால் அதிகபட்சம் ரூ.1 லட்சமும், சேவைத் தொழிலுக்கு ரூ.3 லட்சமும், உற்பத்தி தொழிலுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சமும் வங்கிகள் மூலம் கடன்கள் வழங்கப்படுகிறது. இதில், அரசு மானியம் 25 சதவீதம் உள்பட அதிகபட்சம் ரூ.1.25 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும், பொது பிரிவினர் 18 வயது முதல் 35 வயதுக்குள்ளும், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டவர்கள், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தில் இந்நிதியாண்டுக்கு 19 பேருக்கு ரூ.1.90 கோடி மானியமாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 25 சதவீத மானியத்துடன் தொழில் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சத்தில் இருந்து அதிக பட்சம் ரூ.1 கோடி வரை கடனுதவி பெறலாம்.
 பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் உற்பத்தித் தொழில்களுக்கு அதிக பட்சம் ரூ.25 
லட்சமும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரையி
லும் கடனுதவி பெறலாம். இத்திட்டத்தில் கடனுதவி பெற 8 ஆம் வகுப்பு தேர்ச்சியும்,18 வயது நிரம்பியவர்களாகவும் இருக்க வேண்டும். 
இத்திட்டத்தில் பயன் பெறுவோருக்கு ஆண்டு வருமான உச்சவரம்பு கிடையாது. மானியத்துடன் கடனுதவி பெற சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு ஆலோசனை வழங்கிடவும், அவர்களை ஊக்குவிக்கவும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.
வரும் 18 ஆம் தேதி ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 25-ஆம் தேதி பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
 எனவே, ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பின் மூலம் பயன்பெறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com