திருப்புல்லாணி ஸ்ரீபட்டாபிஷேக ராமசுவாமி திருக்கோயில் சித்திரைத் திருவிழா

ராமநாதபுரம் அருகேயுள்ள திருப்புல்லாணி  பட்டாபிஷேக ராமசுவாமி கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

ராமநாதபுரம் அருகேயுள்ள திருப்புல்லாணி  பட்டாபிஷேக ராமசுவாமி கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஏப்ரல் 27 இல் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
      பழமையான இக்கோயில் விழாவினை முன்னிட்டு, தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி பல்வேறு வாகனங்களில் அலங்காரமாகி, நகரின் முக்கிய வீதிகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 
     தொடர்ந்து, ஏப்ரல் 25 ஆம் தேதி பட்டாபிஷேக ராமசுவாமியும், ஆதிஜெகன்னாதப் பெருமாளும் தனித்தனியாக கருட வாகனங்களில் எழுந்தருளி, இரட்டைக் கருட வாகன சேவையில் அருள்பாலிக்கின்றனர். இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 27 ஆம் தேதி  திருக்கல்யாணமும், ஏப்ரல் 30 இல் தேரோட்டமும் நடைபெறுகிறது.      மே மாதம் 1 ஆம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மே 3 ஆம் தேதி உற்சவ சாந்தியுடனும் இவ் விழா நிறைவு பெறுகிறது.
     விழாவுக்கான ஏற்பாடுகளை, ராமநாதபுரம் சமஸ்தானத்தின் திவான் வி. மகேந்திரன், சரக அலுவலர் எம். ராமு, கோயில் கண்காணிப்பாளர் ஜி. கண்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com