தொண்டி பகுதியில் மீன் வரத்து குறைவு: விலை ஏற்றம்

மீன்பிடித் தடைகாலம் அறிவிக்கப்பட்டிருப்பதால், தொண்டி பகுதியில் மீன் வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது.

மீன்பிடித் தடைகாலம் அறிவிக்கப்பட்டிருப்பதால், தொண்டி பகுதியில் மீன் வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது.
    தற்போது, மீன்பிடித் தடைகாலம் அமலில் உள்ளதால், திருவாடானை அருகே தொண்டி, சோழியக்குடி, விலாஞ்சியடி, எஸ்.பி.பட்டினம், திருப்பாலைக்குடி, முள்ளிமுனை, காரங்காடு, மோர்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால், மீன்வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது. 
    எனவே இப்பகுதியில், முரல் கிலோ ரூ. 350-க்கு விற்கப்பட்டது தற்போது ரூ.450-க்கும், வில மீன் ரூ.300-க்கு விற்றது ரூ.450-க்கும், பாறை கிலோ ரூ.350-க்கு விற்றது ரூ.500-க்கும், நண்டு ரூ.300-க்கு விற்றது ரூ.450-க்கும் விற்கப்படுகிறது.  இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com