ராமநாதபுரத்தில் அம்மன் தேரோட்டம்

ராமநாதபுரம் முத்தால பரமேசுவரி அம்பாள் திருக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் முத்தால பரமேசுவரி அம்பாள் திருக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
 திருக்கோயில் மகா சிவராத்திரித் திருவிழா கடந்த 6 ஆம் தேதி தொடங்கியது. இதில் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக புதன்கிழமை மகாசிவராத்திரியை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. தேரில் முத்தால பரமேசுவரி அம்பாள் வெள்ளி நாகாபரணத்தில் தாமரையில் நின்ற கோலத்தில் பவனி வந்தார். தேரோட்டத்தின் முன்பாக ஜவஹர் சிறுவர் மன்றத்தின் திட்ட அலுவலர் மு.லோகசுப்பிரமணியன் தலைமையில் சிலம்பாட்டமும், டி.டி.விநாயகர் துவக்கப்பள்ளி மாணவியரின் கோலாட்டமும் நடைபெற்றன. இரவு தேவிபட்டிணம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் பா.தீனதயாளன் மகா சிவராத்திரி மகிமை என்ற தலைப்பில் பேசினார். இதனையடுத்து பக்தி இன்னிசைக் கச்சேரியும் நடந்தது. விழாவில் ராமநாதபுரம் வர்த்தக சங்க தலைவர் பா.ஜெகதீசன், தமிழ்ச்சங்க துணைத் தலைவர் குழ.விவேகானந்தன், நகை வியாபாரிகள் சங்க தலைவர் பார்த்தீபன் உள்பட பலரும் கலந்து கொண்டனர். 
வியாழக்கிழமை காலையில் ஆதிரெத்தினேசுவரர் கோயிலில் அம்மன் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் இரவு சிம்ம வாகனத்தில் மகிசாசூர மர்த்தினி அலங்காரத்தில் திருவீதியுலாவும் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை காலையில் பால்க்குடத் திருவிழாவும்,இரவு அம்மன் பூப்பல்லக்கில் சயன அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளிக்கவுள்ளார். ஞாயிற்றுக்கிழமை உற்சவ சாந்தியுடன் விழா  நிறைறவு  பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com