கச்சத்தீவு திருவிழா: நாட்டுப்படகு மீனவர்களையும் அனுமதிக்க கோரிக்கை

கச்சத்தீவு திருவிழாவிற்கு நாட்டுப்படகு மீனவர்களையும் அனுமதிக்க வேண்டும் என நாட்டுப்படகு மீனவர் சங்க நிர்வாகிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

கச்சத்தீவு திருவிழாவிற்கு நாட்டுப்படகு மீனவர்களையும் அனுமதிக்க வேண்டும் என நாட்டுப்படகு மீனவர் சங்க நிர்வாகிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
    ராமேசுவரம் பாரம்பரிய மீனவர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.சின்னத்தம்பி, நாம் தமிழர் கட்சியின் மீனவர் அணியின் மாநில செயலாளர் டோம்னிக்ரவி ஆகியோர் ராமநாதபுரம் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:   கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழா வரும் பிப்ரவரி மாதம் 23, 24 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு இலங்கை கடற்படை சுட்டதில் பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்து விட்டதால் செல்ல முடியவில்லை. இந்த ஆண்டு நாட்டுப்படகு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீனவர் உரிமையை நிலைநாட்டும் விதமாக கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல அனுமதியளிக்க வேண்டும்.
 விசைப்படகில் கச்சத்தீவு திருவிழாவிற்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படும் போது அவர்களிடம் வணிக ரீதியாக பணம் வசூல் செய்யப்படுகிறது. வணிக ரீதியான உள் நோக்கத்திற்காக நாட்டுப்படகு மீனவர்கள் செல்ல அனுமதியளிக்கப்படாமல் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை கச்சத்தீவு திருவிழாவுக்குச் செல்ல அனுமதி அளித்திருந்தும் மீனவர் பிரிட்ஜோ உயிரிழப்பு காரணமாகவே செல்ல முடியவில்லை. ஏற்கெனவே நடைபெற்ற திருவிழாக்களுக்கு  நாட்டுப்படகு மீனவர்கள் பாதுகாப்பான முறையில் சென்று திரும்பி வந்துள்ளோம். 
அதே போன்று இந்த ஆண்டு நடைபெறும் திருவிழாவிற்கும் நாட்டுப்படகு மீனவர்கள் குடும்பத்துடன் பங்கேற்க ஆவலுடன் இருந்து வருகிறோம். இந்த ஆண்டு ஒரு நாட்டுப்படகுக்கு 17 பேர் வீதம் 10 நாட்டுப் படகுகளில் 170 பேர் செல்ல அனுமதியளிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
பங்குத்தந்தையிடம் மனு: உரிமையை மீட்கும் விதமாக கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு  செல்வோம் என பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.    கச்சத்தீவு திருவிழாவில் பாரம்பரிய நாட்டுப்படகில் செனறு தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பாரம்பரிய மீனவ சங்க கூட்டமைப்பினர் திருப்பயண ஏற்பாட்டு ஒருங்கிணைப்பாளர் பங்குத்தந்தை அந்தோணிசாமியிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர். 
    மீனவர்களை நாட்டுப்படகில் குடும்பத்துடன் சென்று வர அணுமதிக்க ஆவன செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர், மீன் துறை கூடுதல் இயக்குநர் மற்றும்  ராமேசுவரம் ஆலய பங்குதந்தை ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். 
 இந்த ஆண்டு பாரம்பரிய உரிமையை மீட்கும் விதமாக அரசு மீன்பிடிக்க அனுமதியளித்துள்ள காப்பீடு செய்யப்பட்ட நாட்டுப்படகில் வழக்கம் போல் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வோம் என அனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com