தொண்டி பேரூராட்சியில் பொங்கல் கோலப்போட்டி

தொண்டி பேரூராட்சியில் புகையில்லா பொங்கல் பண்டிகை கொண்டாடும் விதமாக பெண்களுக்கான கோலப் போட்டி நடைபெற்றது.

தொண்டி பேரூராட்சியில் புகையில்லா பொங்கல் பண்டிகை கொண்டாடும் விதமாக பெண்களுக்கான கோலப் போட்டி நடைபெற்றது.
 புகையில்லா பொங்கல் பண்டிகை கொண்டாடும் விதமாக இப்போட்டி நடைபெற்றது.இதில் மகளிர் சுய உதவிக்குழுவினர், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த பெண்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன. வெற்றி பெற்ற பெண்களுக்கு தொண்டி பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி பரிசுகளை வழங்கினார்.
 பின்னர் அவர் பேசுகையில், தொண்டி பேரூராட்சி சுகாதரமான நகரமாக மாறிவருகிறது. எனவே பொங்கல் பண்டிகையை புகையில்லா பொங்கல் பண்டிகையாக கொண்டாடுவோம். மேலும் வீட்டில் சேரும் குப்பைகளை தெருவில் கொட்டாமல் வீடு தேடி வரும் பேரூராட்சி துப்பரவு பணியாளர்களிடம் ஒப்படைத்து சுகாதரம் காக்க வேண்டும். இதற்கு இப்பகுதி மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவித்தார். 
  இதில் தொண்டி பேரூராட்சி அலுவலர் குணசீலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com