பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல்

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில்  பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில்  பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
 ராமாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரியின் தலைவர் முகம்மது சதக்குத் தம்பி நினைவு தமிழ் மன்றம் சார்பில் தமிழர் திருநாள் மற்றும் கலைப் பண்பாட்டு விழா நடந்தது. அக்கல்லூரி முதல்வர் இ.ரஜபுதீன் தலைமை வகித்தார். விழாவில் பங்கேற்ற அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து வந்திருந்தனர்.
தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி தமிழ்ப்பேராசிரியர் ரா.கண்ணதாசன் நகைச்சுவை சொற்பொழிவாற்றினார்.விழாவில் கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேராசிரியர் டி.கார்த்திக் வரவேற்றார். பேராசிரியர் பி.பாலமுருகன் நன்றி கூறினார்.
இருமேனி அரசுப்பள்ளி: ராமநாதபுரம் அருகேயுள்ள இருமேனி அரசு உயர்நிலைப்பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.டேவிட் மோசஸ் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மத நல்லிணக்கம் மற்றும் பொங்கல் விழாவின் சிறப்புகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. விழா நிறைவில் அனைத்து மாணவ,மாணவியருக்கும் பனங்கிழங்கு மற்றும் கரும்பு ஆகியனவும் வழங்கப்பட்டது.  
 திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி ஆர்.எம்.மெய்யப்பச் செட்டியார் மெட்ரிக் பள்ளியில் வெள்ளிக்கிழமயன்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.  பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு பள்ளி நிறுவனர் எஸ்.எம்.பழனியப்பன் தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் குணாளன் முன்னிலை வகித்தார். விழாவின் சிறப்பு அழைப்பாளராக தமிழ்மன்ற நிர்வாகி ராம.சிவராமன் கலந்து கொண்டு பொங்கல்பானை வைத்து விழாவை துவக்கி வைத்தார். மாணவர்கள் வேஷ்டி சட்டை அணிந்து பாரம்பரிய உடையுடன் பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்கினர். தொடர்ந்து இளைஞர் தினம் மற்றும் விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப் போட்டி, கதை, கவிதை, கட்டுரை, பாட்டுப் போட்டிகள் என பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கபட்டது. இவ்விழாவில் கவிஞர் ஜோதிராஜா, ஆசிரியர் பழனியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக அனைவரையும் பள்ளி முதல்வர் சங்கர் வரவேற்றார். விழா முடிவில் ஆசிரியை மனோன்மணி நன்றி கூறினார்.   
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மாதா கல்லூரியில் மாதா கல்வி நிறுவனங்கள் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ் விழாவுக்கு மாதா கல்வி நிறுவனங்கள் தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்களின் அறங்காவலர்கள் ஜார்ஜ் இமானுவேல் ஆரோக்கியதாஸ், நான்சி, இயக்குநர் ஜான்பீட்டர் ஏசுதாஸ் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். கல்வி நிறுவன நிதியாளர் ஜெயபாக்கியம் வாழ்த்திப் பேசினார். கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடினர். மேலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ் விழாவில் மாதா கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com