ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பொங்கல் விழா

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட தலைமை நூலக அலுவலகம் முன் மாவட்ட நூலக அலுவலர் ஜெ.கண்ணன் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வாசகர் வட்டத் தலைவர் சுந்தரமூர்த்தி, துணைத் தலைவர்கள் கவிதா.கதிரேசன், உலகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மைய நூலகர் வெள்ளைச்சாமி கண்ணன் வரவேற்றார்.
விழாவில் நூலகர்கள் அற்புத ஞானருக்மணி, கவிஞர் மணிவண்ணன், முன்னாள் நூலகர் பாலசுப்பிரமணியன் உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான நூலகர்கள், வாசகர் வட்டத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை: பள்ளி, கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
தேவகோட்டை இராம்நகர் ஆக்ஸ்போர்டு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் பொங்கல் விழா, தாளாளர் விஜயன் தலைமையில் கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் தோரணங்கள் கட்டி, வண்ணக் கோலங்களால் அலங்கரித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் புத்தாடை அணிந்து பொங்கலிட்டனர். தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதல்வர்
அமுதாராணி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர். தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர் தென்றல் மற்றும் மாணவிகள் பொங்கல் சமைத்து மாணவர்களுக்கு வழங்கினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பரமக்குடி ஆயிரவைசிய கல்வியியல் கல்லூரி: பரமக்குடி ஆயிரவைசிய கல்வியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு ஆயிர வைசிய சபைத் தலைவர் எஸ்.பாலுச்சாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சிட்டிசன் கே.ராதாகிருஷ்ணன், சபை செயலாளர் பா.ஜெகநாதன், கல்லூரியின் இணைச்செயலாளர் டி.பி.அரிவாசுதேவன், பொருளாளர் வி.சேகர், ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளி செயலர் எஸ்.கே.பி.இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் செயலாளர் வி.எஸ்.என். செல்வராஜ் வரவேற்றார்.
இளஞ்செஞ்சிலுவை சங்கம் இணைந்து நடத்திய இவ்விழாவில் கல்லூரி மாணவ-மாணவிகள் தமிழர் பாரம்பரிய உடயணிந்து வந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழர்களின் கலைகளான கும்மி பாட்டு, ஒயிலாட்டம், சிலம்பம், கோலப்போட்டிகள் நடைபெற்றன. கல்லூரியின் முதல்வர் அல்போன்ஸா நன்றி கூறினார்.
கமுதி: கமுதி அருகே பேரையூரில் அரசு வட்டார தலைமை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆரம்ப சுகாதார நிலையத்தின் வளாகத்தில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கமுதி வட்டார ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் நாகரஞ்சித் தலைமையில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.மேலும் சிகிச்சைக்காக வந்தவர்களும் கலந்து கொண்டனர்.
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் சோனைமீனாள் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவிகள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் எஸ்.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். வணிகவியல் துறைத் தலைவர்கள் எஸ்.திலிப்குமார், எம்.வீரக்குமார், எஸ்.மலர்விழி, எஸ்.சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாணவிகளுக்கிடையே பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்.மாணவிகள் செய்திருந்தனர்.
அதே போல் முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவுக்கு கல்லூரி முதல்வர் சிதம்பர விநாயகம் தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைபேராசிரியர் க.விமலா, கௌரவ விரிவுரையாளர்ஆ.பாலமுருகன், அலுவலக கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
பள்ளிகளில்... முதுகுளத்தூர் ஸ்ரீகண்ணா மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு பள்ளியின் நிறுவனர் காந்திராஜன் தலைமை வகித்தார். இதே போல் முதுகுளத்தூர் அருகே காத்தாகுளம் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் கு.பாண்டியன் தலைமை வகித்தார். உதவி ஆசிரியர் பாலமுருகன் மற்றும் கிராம பொதுமக்கள் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை விக்டோரியா ராணி தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை கே.உமாராணி செய்திருந்தார். எம்.தூரி அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு தலைமை ஆசிரியர் காளிமுத்து தலைமை வகித்தார். கல்விக்குழுத் தலைவர் உமாராணி, மேலாண்மைக் குழுத் தலைவர் ராமலட்சுமி, துணைத் தலைவர் பரிமலா, ஆசிரியை தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாயல்குடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com