ராமநாதபுரம் மாவட்டத்தைவறட்சிப் பகுதியாக அறிவிக்கக் கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி நயினார்கோவில் தேவர் சிலை முன் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி நயினார்கோவில் தேவர் சிலை முன் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு நயினார்கோவில் ஒன்றியத் தலைவர் க.ரெத்தினசபாபதி தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் எஸ்.வி.ராமன், வ.ராமலிங்கம், ஆ.சுப்பையா, துணைச் செயலர் எஸ்.குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலர் கா.ஜவகர் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் தென்மண்டலத் தலைவர் மு.மதுரைவீரன், எல்.ஆதிமூலம், மாவட்டச் செயலர் கே.எம்.காந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இதில் ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரியும், மிளகாய் விவசாயிகளுக்கு 2016-17-க்கான காப்பீடு இழப்பீட்டு தொகையை வழங்கக் கோரியும், உரிய நேரத்தில் பயிர் கடன் வழங்காத கூட்டுறவு வங்கிமீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷமிடப்பட்டது. செயற்குழு உறுப்பினர் அ.முனியாண்டி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com