கமுதியில் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்: தொழிலாளர்கள் அலைக்கழிப்பு

கமுதியில் சனிக்கிழமை நடைபெற்ற அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் உறுப்பினர் சேர்கை முகாம், பெயரளவில் மட்டுமே நடைபெற்றதாக வியாபாரிகள், தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கமுதியில் சனிக்கிழமை நடைபெற்ற அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் உறுப்பினர் சேர்கை முகாம், பெயரளவில் மட்டுமே நடைபெற்றதாக வியாபாரிகள், தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
     ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் மாவட்டத் தொழிலாளர் நலத் துறை சார்பில், தமிழ்நாடு  கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் சிறப்பு உறுப்பினர் சேர்கை முகாம் ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாம் தொடர்பாக 
எந்தவொரு முன்னறிவிப்பும், விளம்பரமும் இன்றி பெயரளவில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
    இதில் பங்கேற்க அதிகாரிகள் நண்பகல் 12 மணிக்கு மேல் வந்தனர். பின்னர், சிறிது நேரத்தில் மதிய உணவு இடைவேளைக்கு சென்றுவிட்டு,  மாலை 4 மணிக்கு திரும்பினர். அதையடுத்து, குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் பதிவு செய்தனர்.
     இம்முகாம் குறித்து தகவலறிந்து தொழில் சான்றுகள், ஆவணங்களுடன் வந்த பல்வேறு தொழிலாளர்களை, அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்து திருப்பி அனுப்பினர். இதனால், 100-க்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள், இளைஞர்கள், தொழில் நிறுவன உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
    இதுபோன்ற முகாம்கள் நடைபெறும்போது, முறையாக அறிவிப்பு செய்து, தொழிலாளர்களை அலைக்கழிக்காமல் சான்றுகளை பதிவு செய்யவேண்டும் என, கமுதி பகுதி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com