மழை வேண்டி சாயல்குடி அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா

சாயல்குடியில் மழை வேண்டி நிறைகுளத்து அய்யனார் கோயில் புரவி எடுப்பு, பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சாயல்குடியில் மழை வேண்டி நிறைகுளத்து அய்யனார் கோயில் புரவி எடுப்பு, பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு கிராமத்தினர் ஒரு மாதம் விரதம் இருந்து கிராமத்தில் பிடி மண் எடுத்து மண்ணால் செய்யப்பட்ட குழந்தைகள், குதிரை உருவங்களுக்கு வண்ணம் தீட்டி, அவற்றை பெண்களும், ஆண்களும் தலையில் சுமந்து முக்கிய வீதிகளில் ஊர்வலம் வந்து அய்யனார் கோயிலில் நேர்ச்சையாக செலுத்தினர். சென்ற வருடம் தங்களது வயலில் விளைந்த நெல், மிளகாய் போன்ற தானியங்களை அய்யனாருக்குப் படைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.  
விழா குறித்து சாயல்குடியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் கூறியதாவது, வருடந்தோறும் வறட்சி நீங்கி நல்ல மழை பொழிவு ஏற்பட வேண்டும் என வேண்டி ,அனைத்து சமுதாய மக்களும் இணைந்து சகோதரத்துவத்துடன் இவ்விழாவை கொண்டாடுகிறோம் என்றார்.
விழாவில் கிராம மக்கள் அய்யனார் கோவிலுக்கு முன்பு பொங்கல் வைத்து, ஆடு, கோழிகளை பலியிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
 மாலையில் திருவிளக்கு பூஜைகள், அன்னதானம் ஆகியன நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை சாயல்குடி  பொது மக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com