படகில் இலங்கை செல்ல முயன்ற 2 அகதிகள் உள்பட 4 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சிங்கிலி தீவுப்பகுதியில் இருந்து நாட்டுப் படகு மூலம் இலங்கை செல்ல முயன்ற 2

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சிங்கிலி தீவுப்பகுதியில் இருந்து நாட்டுப் படகு மூலம் இலங்கை செல்ல முயன்ற 2 அகதிகள், உதவி செய்த 2 முகவர்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவுப்பகுதியில் இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக இலங்கை செல்ல இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் சனிக்கிழமை கியூ பிரிவு காவல்துறையினர் மண்டபம் கடலோரகாவல் துறை ஆய்வாளர் பெலிக்ஸ் தலைமையில் அதிவேக படகில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மண்டபம் பகுதியில் உள்ள சிங்கிலி தீவுப்பகுதியில ஆள் நடமாட்டம் இருப்பதை கண்டனர். உடனடியாக அங்கு விரைந்து சென்று பார்த்தபோது இருவர் சந்தேகப்படும்படியாக நின்றனர். அவர்களைப் பிடித்து விசாரித்தபோது அவர்கள் இலங்கையைச் சேர்ந்த சாயிசன்(20), ஜெயக்குமார்(40) ஆகியோர் என தெரியவந்தது. இருவரும் பல ஆண்டுகளுக்கு முன்பு அகதிகளாக தமிழகம் வந்து திருச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்தவர்கள்.
தற்போது மண்டபம் கேம்ப் பகுதியை சேர்ந்த சிவக்குமார்(43)குஞ்சார் வலசை பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன்(40) ஆகியோர் உதவியுடன் படகு மூலம் இலங்கைக்கு செல்ல திட்டமிட்டு சிங்கிலி தீவில் காத்திருந்தது தெரியவந்தது. நபர் ஒன்றுக்கு 30 ஆயிரம் கொடுத்து படகில் செல்ல இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதற்கிடையே இதே தகவல் அடிப்படையில் சிங்கிலி தீவுப்பகுதியில் பகுதிக்குச் சென்ற வனத்துறை அதிகாரி சதீஷ் தலைமையிலான வனத்துறையினர் அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற நாட்டுப்படகில் இருந்த சிவக்குமார் மற்றும் பாஸ்கரன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் அகதிகள் இருவரை இலங்கைக்கு ஏற்றிச் செல்ல வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். நாட்டுப்படகு பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com