நகைக் கடை ஊழியர் கொலை: இருவருக்கு ஆயுள் தண்டனை: மதுரை நீதிமன்றம் தீர்ப்பு

நகைக் கடை ஊழியரை கடத்தி கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மதுரை நீதிமன்ற திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

நகைக் கடை ஊழியரை கடத்தி கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மதுரை நீதிமன்ற திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
 ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை அடுத்த மொசகுடியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (31). நகைக் கடையில் பணியாற்றி வந்தார். 
இவரை கடந்த 2015 ஆம் ஆண்டு சிலர் மதுரைக்கு கடத்தி வந்து கோ.புதூர் போலீஸ் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் கொலை செய்து உடலை வீசிச் சென்றனர்.
  இந்த சம்பவம் குறித்து கோ.புதூர் போலீஸார் வழக்குப் பதிந்து சென்னை பம்மல் பகுதியைச் சேர்ந்த சதாம்உசேன் என்ற கருப்பு (28), மதுரை மேலமடையைச் சேர்ந்த சுரேஷ் (19) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். இதில் நகைக்காக கருப்பசாமியை அவர்கள் கைது செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். 
 இந்த வழக்கு மதுரை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. முடிவில், சதாம் உசேன், சுரேஷ் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, இருவருக்கும் தலா ஆயுள்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com