முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்க மறுப்பு: ராமேசுவரத்தில் வங்கி கிளை முற்றுகை

ராமேசுவரத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்க மறுப்பதால் அந்த வங்கியை இந்து மக்கள்

ராமேசுவரத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்க மறுப்பதால் அந்த வங்கியை இந்து மக்கள் கட்சியினர் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞர்களுக்கு தொழில் தொடங்கும் வகையில் பிணை இல்லாமல் கடன் வழங்கும் பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் முறையாக கடன் வழங்கவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார். 
இந்நிலையில், அனைவருக்கும் முத்ரா திட்டத்தில் பிணை இல்லா கடனுதவி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆனால் இதற்கு வங்கி நிர்வாகம் எந்த விதத்திலும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ராமேசுவரத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் கடந்த 18 மாதங்களாக முத்ரா திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்படும் என விளம்பரப் பதாகை மட்டும் ஒட்டப்படுள்ளது. இளைஞர்கள் அதற்குறிய படிவத்தை வாங்க சென்றால் மேலாளர் உள்பட ஊழியர்கள் அலைக்கழிப்பு 
செய்து வருகின்றனராம்.
இதனைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் பிரபாகரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்டவர்கள் வங்கி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அந்த வங்கியின் மேலாளர் கடன் பெறும் படிவத்தை அனைவருக்கும் 
வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com