ராமநாதபுரம் ஸ்ரீவழிவிடு முருகன் கோயிலில் மார்ச் 21-இல் பங்குனித் திருவிழா தொடக்கம்

ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள இக்கோயிலில் விழாவினை முன்னிட்டு நாள்தோறும் இரவு ஆலய வளாகத்தில் இலக்கியச் சொற்பொழிவும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக மார்ச் 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரத் திருநாளை முன்னிட்டு பால்குடத் திருவிழா நடைபெறுகிறது. ராமநாதபுரம் நொச்சியூரணி கடற்கரையில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து பால்குடங்கள், காவடிகள் ஆகியன புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து திருக்கோயிலை அடைந்த பின்னர் மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. அன்று இரவே பூக்குளி இறங்கும் வைபவமும், மார்ச் 31 ஆம் தேதி முருகப் பெருமான் திருவீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் சு.கணேசன் தலைமையிலான விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com